சிம்பன்ஸியுடன் நடிகர் ஜீவா நடிக்கும் "கொரில்லா"

 
Published : Dec 29, 2017, 06:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
சிம்பன்ஸியுடன் நடிகர் ஜீவா நடிக்கும் "கொரில்லா"

சுருக்கம்

jeeva acting with Chimpanzee

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் "கொரில்லா".

ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்தில் சிம்பன்ஸியுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்ஸியை வைத்து இப்படம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்ஸி தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்சி கொடுக்கப்பட்டது. 

இந்தப் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட சிம்பன்ஸிகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும்.

இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இத்திரைப்படம் குறித்து இவர் கூறுகையில்...

“சிம்பன்ஸிகள் பெரும்பாலும் மிகவும் அறிவுள்ளவை. எப்போதும் புன்னகையுடன் இருப்பவை. ஏன் என்றால் அவை எப்போதும் குறும்பானவை. இது பெரும்பாலான பார்வையாளர்களை கவர்ந்துவிடும். இதையே அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்பன்ஸி, ஆக்‌ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தாய்லாந்தில் பிரத்யேகமாக ஒரு சிம்பன்ஸி 4 மாதங்களாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிம்பன்ஸி  பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இந்த திரைப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். "கொரில்லா" படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!