இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது - என்ன சொல்ல போகிறார் ரஜினிகாந்த்..!

 
Published : Dec 29, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது - என்ன சொல்ல போகிறார் ரஜினிகாந்த்..!

சுருக்கம்

rajinikanth meet fans in forth day

இன்று நான்காவது நாளாக ரசிகர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன் அரசியல் குறித்த நிலைப் பாட்டினை 31 ஆம் தேதி அறிவிக்கவிருப்பதை குறித்து, இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது என்று கூறினார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய போது, 

" கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். அங்கே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருக்கிறார்கள். சச்சிதானந்த சுவாமிகளும், தயானந்த சுவாமிகளும் எனது குருமார்கள்.  சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு அந்தப் பெயர் இமயமலையில் உள்ள சிவானந்த சுவாமிகளிடம் முக்தி பெற்ற பின்னரே அந்த பெயர் வந்தது. அவர்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல நன்மைகள் மக்களுக்கு செய்து வருகின்றனர். 

ஒரு முறை நானும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் கோவை சென்றிருந்த போது ரசிகர்கள் அங்கே குழுமியிருந்தனர். நாங்கள் சென்ற போது ரசிகர்கள் அனைவரும் என் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்தனர். பின் விழா முடிந்தவுடன் சிவாஜியிடம் இது குறித்த  என் வருத்தத்தை தெரிவித்தேன். அதற்கு அவர், ரஜினி இதற்கு பெயர் தான் காலம். நான் பெரிய நடிகனாக இருந்த போது எனக்கும் இது போன்ற கூட்டம் இருந்தது. இப்போது இது உனக்கான காலம். 

எனவே எந்தவொரு செயலுக்கும் காலம் என்பது முக்கியம். நமக்கான காலம் வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். " என்று அவர் கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்