சைக்கோ கில்லராக நடிக்கிறாரா ஆர்.ஜே.பாலாஜி..! பயங்கரமான போஸ்டருடன் அடுத்த படத்தை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

Published : Jun 20, 2024, 01:32 PM IST
சைக்கோ கில்லராக நடிக்கிறாரா ஆர்.ஜே.பாலாஜி..! பயங்கரமான போஸ்டருடன் அடுத்த படத்தை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சுருக்கம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் ஆர். ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார் இப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  

'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட இரண்டு காதல் திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்சன் நம்பர் 3' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 

Ethirneechal: எதிர்நீச்சல் முடிவுக்கு சன் டிவி போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்? உண்மையை உடைத்த அப்பத்தா!

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் தயாரிப்பாளர்களும், ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானரிலான திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வரும் நடிகர் ஆர். ஜே. பாலாஜியும் இணைந்திருப்பதால், இவர்களின் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Ajith Sister Marriage: தேவதை போல இருக்கும் தங்கையை... திருமணத்தில் மாப்பிள்ளைக்கு தாரைவார்த்து கொடுத்த அஜித்!

மேலும் இப்படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரில், ஆர்.ஜே.பாலாஜி செம்ம ரிச்சாக கோட் - ஷர்ட்டில் அமர்ந்திருக்க, அவரின் சட்டை முழுவதும் ரத்தமாக உள்ளது. மேலும், அவர் முன்பு கேக் அதன் மேல் ரத்த கரையுடன் கத்தி, பக்கத்தில் சரக்கு பாட்டில், தோட்டாக்களுடன் துப்பாக்கி, சுத்தி, போர்க், டிஸுஸ், என அந்த இடமே கொஞ்சம் ரணகளமாக உள்ளதால்... ஆர்.ஜே.பாலாஜி சைக்கோவாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்