ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் அடுத்த பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கன்னட சினிமாவை உச்சத்துக்கு கொண்டு சென்ற படங்களில் முக்கியமானது காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனது இப்படம். கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்து இருந்தது. காந்தாரா படம் முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியிடப்பட்டது. கன்னட ரசிகர்களிடம் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
இதையடுத்து வெளியிட்ட அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து காந்தாரா படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் பிசியானார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
காந்தாரா படத்தின் முந்தைய பாகமாக இப்படத்தை எடுக்க உள்ளதால் இதற்கு காந்தாரா சாப்டர் 1 என பெயரிட்டுள்ளனர். இப்படத்தையும் ரிஷப் ஷெட்டி தான் இயக்குகிறார். அதில் ஹீரோவாகவும் அவரே நடிக்கிறார். முதல் பாகத்தைவிட படு பிரம்மாண்டமாக அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறது ஹோம்பாலே நிறுவனம். இதனை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் நான் கடவுள் படத்தில் வரும் ஆர்யா போல் நீண்ட முடி மற்றும் தாடியுடன் கட்டுமஸ்தான் உடம்போடு மிரட்டலாக காட்சியளிக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதைப்பார்த்த ரசிகர்கள் பர்ஸ்ட் லுக்கே புல்லரிக்கும் வகையில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இந்த பர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது யூடியூப்பில் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... காதலால் இதயங்களை வென்ற என் ஓமனா... ஜோதிகாவின் 'காதல் தி கோர்' படம் பார்த்து சிலாகித்து பேசிய சூர்யா