நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களான எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து எக்கச்சக்கமான பதிவுகளும் போடப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும் உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : “தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என கமல் குறிப்பிட்டுள்ளார்.
தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி… pic.twitter.com/zHNK0DR2Rg
இதையும் படியுங்கள்... பதவி பறிப்பு... கேப்டன் ஆன குஷியில் இருந்த நிக்சனின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பிக்பாஸ்..!