Director Sudha Kongara : பருத்திவீரன் பட பிரச்சனை இப்பொது திரைத்துறையில் மிகப்பெரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு ஆதரவாக சிலரும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரபல இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகிய இருவரிடையேவும் நீண்ட காலமாக ஒரு பிரச்சனை இருந்து வருகிறது. நடிகர் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான "பருத்திவீரன்" திரைப்படத்திலிருந்து இந்த பிரச்சனை நடந்து வருகிறது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக கார்த்தி 20 நிகழ்ச்சியில் அமீரை அழைக்காதது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு பிறகு, ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்பட படப்பிடிப்பின் போது நடந்த பல சம்பவங்கள் குறித்து அப்பொழுது பேசி வருகிறார்.
இதற்கிடையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு திரைத்துறையினர் சிலர் ஆதரவு தெரிவிக்க, இயக்குனர் அமீருக்கும் திரைத்துறையினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியிருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா "நானும் நடிகர் கார்த்தியும், இயக்குனர் சுதா கொங்காராகவும் இணைந்து "ராம்" திரைப்படம் பார்க்க சென்றோம்".
ரஜினியோ, கமல் ஹாசனோ கிடையாது.. ரூ.1666 கோடி சொத்துக்கு அதிபதி இந்த தென்னிந்திய நடிகர் தான்..
"அப்பொழுது சுதா கொங்கரா "ராம்" படத்தின் மேக்கிங் சரியில்லை என்று என்னிடம் கூறினார்" என்று பேசி இருந்தார். இந்நிலையில் அவருடைய அந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக இப்பொழுது ஒரு டீவீட்டை போட்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்... "பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்."
"நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன். என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை. இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி" என்று கூறியுள்ளார்.
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து…
— Sudha Kongara (@Sudha_Kongara)அதாவது திரைத்துறையை பொறுத்தவரை அமீர் அவர்களுடைய திரைப்படங்களில் இருந்து கற்றுக்கொண்ட சில விஷயங்களை வைத்தே தன்னுடைய படங்களில் வரும் பெண்களுடைய கதாபாத்திரத்தை தான் அமைத்திருப்பதாக கூறி ஞானவேல் ராஜாவிற்கு அவர் பதில் அளித்துள்ளார்.