
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாநாடு. எஸ்.எஸ்.ஐ புரோடக்சன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தார். முன்னதாக இந்த திரைப்படம் சிம்புவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தடைபட்டதாக செய்திகள் வெளியானது.
சுமார் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் நேற்று நவம்பர் 25ம் தேதி இந்த திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாடுங்கள் நடைபெற்ற நிலையில், இது குறித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார் இந்த படத்தின் நாயகன் சிலம்பரசன்.
அதில் "மாநாடு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது சந்தோஷம் அளிக்கிறது, மீண்டும் ஒரு முறை அந்த டைம் லூப்பிற்குள் செல்ல ஆவலாக இருக்கிறேன், இந்த திரைப்படம் வெற்றிகரமான திரைப்படமாக மாற உதவிய அனைவருக்கும் நன்றி" என்று கூற அதற்கு இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் "Loop Continues" என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.
இதனால் மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக இணையவாசிகள் பேசி வருகின்றனர். டைம் லூப் என்கின்ற ஒரு விஷயத்தை மிக நேர்த்தியாக கையாண்டு ஒரு சுவாரசியமான திரைப்படத்தை வெங்கட் பிரபு கொடுத்திருந்தார் என்றால் அது மிகையல்ல. இருப்பினும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? ஆகாதா? என்பது வெங்கட் பிரபுவிற்கு தான் வெளிச்சம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.