ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் காந்தாரா படம் கன்னடத்தில் ஹிட் ஆனதை அடுத்து தற்போது தமிழிலும் டப்பிங் செய்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
‘’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் தான் ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பதும் ரிஷப் ஷெட்டி தான்.
கன்னட மொழிப் படமான இது விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் பதிப்பு நேற்று அக்டோபர் 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார். கன்னடத்தை போலவே ‘காந்தாரா’ படத்திற்கு தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது : “காந்தாரா - அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
இதையும் படியுங்கள்... அண்ணாசாலையில் துணிவு பட ஷூட்டிங்... மாஸாக வந்த அஜித்தை பார்க்க அலைமோதிய மக்கள் கூட்டம்
. expresses his love towards for pic.twitter.com/EerZzT2Tsb
— DreamWarriorPictures (@DreamWarriorpic)அடிப்படையில் நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். இப்படத்தின் படப்பிடிப்பை என்னுடைய சொந்த ஊரில் தான் நடத்தினேன். சிறுவயதில் நான் என்னென்னவெல்லாம் பார்த்து ரசித்தேனோ... அதனைத் தான் இந்த படத்தில் படமாக்கி உள்ளேன். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள் என்று இருக்கும், அதேபோல் குலதெய்வங்களும் உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் நாங்கள்.
காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எந்தவித பாகுபாடும் இன்றி சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன். ‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றிருப்பது போல் நான் சிறு வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள். இது தற்போது எந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன். இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கின்றன என்கிற நம்பிக்கையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது” என கூறினார்.
இதையடுத்து நடிகர் கார்த்தி காந்தாரா படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து அவரை கட்டி அணைத்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டின் 'ட்ரீம் கேர்ள்' ஆக வலம் வந்த ஹேமமாலினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!