போதை பொருள் விவகாரம்..! ரியா சக்ரபோர்த்தி ஜாமீன் மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published : Sep 11, 2020, 01:34 PM IST
போதை பொருள் விவகாரம்..! ரியா சக்ரபோர்த்தி ஜாமீன் மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சுருக்கம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுள்ளனர் மத்தியில் தற்போது வரை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுள்ளனர் மத்தியில் தற்போது வரை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பின்னர் போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் ரியா சத்ராபார்த்தியிடம் விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், செப்டம்பர் 8 ஆம் தேதி, 
ரியாவை  கைது செய்தனர்.

இந்நிலையில், ரியா தரப்பில் இருந்து ஜாமீன் கோரி , மும்பை சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த ரியாவின் ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை சிறப்பு நீதி மன்றம், ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமீன் வழக்க மறுத்துவிட்டது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?