வரி ஏய்ப்பு புகார்... இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 11, 2020, 12:23 PM IST
Highlights

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த செல்போன் நிறுவனம் ஒன்றிற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுப்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லிப்ரா என்ற செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.3.47 கோடியை ஊதியமாக தர முன்வந்துள்ளனர். இதையடுத்து அந்த தொகையை ஏ.ஆர்.ரகுமான் தனது அறக்கட்டளை கணக்கில் அனுப்ப கூறியுள்ளார். 

வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ஏ.ஆர்.ரகுமான் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியதாக கூறி வருமான வரித்துறை குற்றச்சாட்டியது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தரப்பு விளக்கத்தை ஏற்று முதன்மை ஆணையர் விசாரணையை கைவிட்டார். இந்த உத்தரவை வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 

 

இதையும் படிங்க: கலகலப்பாய் சிரிக்க வைக்க இத்தனை கெட்டப்புகளா?... வடிவேல் பாலாஜியின் அசத்தல் அவதாரங்கள் இதோ...!

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அடங்கிய அமர்வு விசாரித்தது. வருமான வரித்துறையின் மனு மீது பதிலளிக்கும் படி ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு , வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 

click me!