
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான்.
மார்க்கெட் இருக்கோ, இல்லையோ? எங்கு ஸ்டன்ட் மாஸ்டர்களை பார்த்தாலும், குனிந்து வணங்கி பவ்யம் காட்டுவது ஹீரோக்களின் வாடிக்கை! இவர்களை பொருத்தவரை உயர்ந்த இடத்தில் இருக்கும் மாஸ்டர்கள். மோசமாக நடந்து கொண்டாரா, அல்லது ஒரு சேஞ்ச் இருக்கட்டும் என்று நினைத்தார்களா தெரியாது.
அஜீத்தின் முந்தைய படங்கள் சிலவற்றில் பிரமாதமாக வொர்க் பண்ணிய பைட் மாஸ்டர் சில்வா, AK 57 ல் இல்லை! இவருக்கு பதிலாக கணேஷ் என்ற ஸ்டன்ட் மாஸ்டரை நியமித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கும் வரை, ‘நம்மதான் இந்த படத்துக்கு அடிதடி பொறுப்பு’ என்று நம்பிக் கொண்டிருந்த சில்வாவுக்கு முதுகுத் தண்டில் ஜிலீர்.
“என்ன தல இப்படி பண்ணிட்டீங்களே..?” என்று அவர் கேட்டதாகவும், “டைரக்டர் விருப்பத்துக்கு நான் என்னைக்கு குறுக்கே நின்றிருக்கேன்?” என்று அவர் பதிலளித்ததாகவும் தகவல்.
எது எப்படியோ? அஜீத்தின் வெற்றிப்பட சென்ட்டிமென்ட் ஒன்று உண்டு. அது விநாயகர் சம்பந்தமான ஒரு பாடலோ, அல்லது விநாயகர் போட்டோவோ கட்டாயம் படத்தில் இருக்கும். இந்தப்படத்தில் விநாயகருக்கு அவரது பெயர் கொண்ட கணேஷ் ஸ்டன்ட் மாஸ்டர் ஆகியிருக்கிறார்.
Attachments area
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.