
சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ் சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. பாெது மேடையில் ‘மிரட்றாங்கய்யா…’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதலமைச்சா் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம். மறுநாளே சிவகார்த்திகேயன் தலைப்புச் செய்தி ஆகிவிட, தமிழ் சினிமாவிலிருந்து பலரும் ஆதரவு தொிவித்தனா், விஷாலும், சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கு. அவரை நடிகர் சங்கம் பாதுகாக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில்தான் அந்த மின்னல்….
திடீரென ரஜினியிடமிருந்து போன் வந்ததாம் சிவகார்த்திகேயனுக்கு. எடுத்த எடுப்பிலேயே “இதையெல்லாம் இக்னோர் பண்ணுங்க சிவா…” என்றுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. அதற்கப்புறம் ரஜினி பேசிய விபரங்கள் அனைத்தும் மிக மிக வாஞ்சையான வார்த்தைகள்.
“உங்களுக்கு எந்த நாடு பிடிக்கும்? அதை சொல்லுங்க” என்று கேட்டவர், “எந்த நினைப்பும் இல்லாமல் எல்லாத்தையும் தூக்கி இங்கேயே வச்சுட்டு குடும்பத்தோடு அந்த நாட்டுக்கு போங்க. பத்து நாள் கழிச்சி நீங்க திரும்பி வரும்போது எல்லாம் சரியாகியிருக்கும். அதுமட்டுமல்ல, குழந்தைகளும் குடும்பங்களும் விரும்புகிற இடத்தில் நீங்க இருக்கீங்க. மக்கள் ஒண்ணு நினைச்சிட்டா அதை யாராலும் தடுக்க முடியாது.
சந்தோஷமா இருங்க. டென்ஷனை தலைக்கு ஏத்திக்க வேணாம்” என்றாராம். ரஜினியின் இந்த ஆறுதல் வார்த்தைகள் சிவகார்த்திகேயனுக்கு யானை பலத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.