பொன்னியின் செல்வன் 2 படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமாக உருவானது 'பொன்னியின் செல்வன்'. பல ஜாம்பவான்கள் கல்கியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட, பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முற்பட்ட நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த சரித்திர வரலாற்றை யாராலும் எளிதில் திரைப்படமாக எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் லைகாவின் தயாரிப்பில் பல்வேறு சவால்களை கடந்து, இப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்தார் இயக்குனர் மணிரத்னம்.
இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ஒட்டுமொத்தமாக இப்படத்தின் இரண்டு பாகத்தையும் இயக்க இயக்குனர் மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட் செலவு செய்த நிலையில், முதல் பாகமே இந்த 500 கோடியை பெற்று தந்தது.
Elated to be tying up with for Tamil Nadu theatrical distribution for pic.twitter.com/JsJoYAwGvS
— Lyca Productions (@LycaProductions)
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாகத்தில் அப்படி இப்படி என்று சில குறைகள் இருந்தாலும், இப்படத்தை நேர்த்தியாக இயக்கி இருந்தார் மணிரத்னம். மேலும் இரண்டாவது பாகத்தை அவர் எப்படி இயக்கி இருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற அக நக என்கிற மெலடி பாடல்.. வெளியாகி, வந்திய தேவன் மற்றும் குந்தவையின் காதலை எடுத்துரைத்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை நடிகரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் 29 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
அதோடு பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலரும் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலர் மற்றும் இசையை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை. அதே போல் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'அக நக' பாடல் ஒரே நாளில் ஐந்து மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.
இதுவரை 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா, எந்த இடத்தில் நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் பாகத்திற்கு களத்தில் இறங்கி புரமோஷன் செய்த படக்குழு, தற்போது சமூக வலைதளம் மூலமாக படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கச் செய்து வருகின்றனர்.
A momentous occasion calls for a momentous guest!
Join us in welcoming the one and only sir to unveil the music and trailer of on March 29th at Nehru Indoor Stadium, Chennai! pic.twitter.com/O1LwrI0JW5