
ஜெயலலிதா:
பெண் என்றதும் பலருக்கு முதலில் நினைவிற்கு வருவது அம்மா தான், ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா... ஒட்டு தமிழகத்தில் உள்ள அனைவர்க்கும் தாயாக விளங்கியவர்.
அவரை அம்மா என்று அழைத்த அதனை உள்ளமும் உன்னதமான பாசத்துடன் மட்டுமே அம்மா என்று அழைத்தது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், பலர் அவரது திருவுருவ படத்தை வைத்து வீட்டில் பூஜித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் கொடுத்து இன்று பலர் மனதில் தெய்வமாய் வாழும் ஜெயலலிதாவின் சாதனைகள் சொல்லில் அடங்காது.
ஆச்சி மனோரமா:
மூன்று தலைமுறை கதாநாயகர்களுடன் இணைத்து பல குணச்சித்திர வேடங்களில் அசத்திவர் மனோரம்மா.
எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன்,ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற பல முன்னனி நடிகர்களுடன் 1000 படத்திற்கு மேல் நடித்து சாதனை படைத்தவர்.
நடனம், பாடல், காமெடி, நாடகம் என பலவற்றிலும் சிறந்து விளங்கியவர், ஒட்டு மொத்த திரையுலகினராலும் செல்லமாக ஆச்சி என்று அழைக்கப்பட்ட தேவதை என்று கூட சொல்லலாம்.
ஸ்ரீவித்யா:
கேரளாவை பிறப்பிடமாக கொண்ட நடிகை ஸ்ரீவித்யா... மலையாள படத்தில் அறிமுகம் கொடுத்து பின் தமிழ் தெலுங்கு இந்தி போன்ற அணைத்து மொழி படங்களிலும் நடித்தவர் .
அம்மா, அண்ணி, மாமியார் என எந்த வித நடிப்பையும் உள்வாங்கி நடிக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீ வித்யா, மேலும் இவர் ஒரு பாடகிம் ஆவர்.
இவர் நடித்த படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற இவர், புற்றுநோய் காரணமாக இந்த உலகை விட்டு பிரிந்தார்.
சுஜாதா:
மலையாள படங்களில் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்த இவர், தமிழில் அவள் ஒரு தொடர்கதை மூலம் அறிமுகம் ஆனார்.
இவரது நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது, கதாநாயகியாக கொடுத்த இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார் . ஒரு காலத்தில் அம்மா வேடம் என்றால் சுஜாதாதான் பலருக்கு நினைவிற்கு வரும். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்தவர் என்பது குறிப்பிட தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.