என் தந்தை பிச்சை எடுத்தார்...உச்ச கட்ட கொடுமையை பார்த்தேன்...விஷால் உருக்கம்.. 

 
Published : Mar 07, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
என் தந்தை பிச்சை எடுத்தார்...உச்ச கட்ட கொடுமையை பார்த்தேன்...விஷால் உருக்கம்.. 

சுருக்கம்

vishal about his father is begging in production field

நடிகர்களுக்கு உதவிகள் செய்வதாக கூறி வெற்றிபெற்றுவிட்டு  தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுவது நியாயமா என சமீபத்தில் நடிகர் ஸ்ரீ காந்த் கூட கேள்வி எழுப்பி இருந்தார் என்பதை நமது தளத்திலேயே கூறி  இருந்தோம்.

இந்நிலையில் சமீபத்தில்  பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால் தான் ஏன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டி இட நினைக்கிறேன் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

விஷால் பேசுகையில்  இந்த தேர்தலில் இந்த புதிய அணி இங்கு வந்திருப்பதரக்கான காரணம் நல்லது செய்வதற்காக தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. நலிந்த என்ற ஒரு பிரிவை போக்குவதற்காக தான் இந்த அணி இங்கு அமர்ந்துள்ளார்கள். 

தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும். 

தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடத்தில் நடக்காததை நடத்தி காட்ட வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் தான் நான் இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இந்த அணி சார்பாக நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். 

எனக்கு தலைவர் என்ற விஷயம் எப்போது ஞாபகம் வரும் என்றால் கையெழுத்து போடும் போது மட்டும் தான் ஞாபகம் வரும். மற்றபடி எனக்கு அது ஞாபகம் வராது. நான் தயாரிப்பாளர் சங்கத்தை முன்னேற்ற தான் வந்துள்ளேன். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் இந்த திரையுலகம் நன்றாக இருக்கும் என்பது தான் உண்மை. திரையுலகம் நன்றாக இருந்தால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்.

நடிகர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகளோடு இணைந்து நாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களை எல்லாம் செய்துள்ளோம். அதே போல் நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் நடிகர் சங்க கட்டிட வேலை துவங்கவுள்ளது. நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். 

நான் என்னுடைய தந்தையிடம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறியதும் என்னுடைய தந்தை எதற்காக நிற்க போகிறாய் என்று கேட்டார். என்னுடைய தந்தை 'ஐ லவ் இந்தியா' என்ற படத்தை எடுத்தார். 

மேலும்  'மகாபிரபு' போன்ற வெற்றி படங்களை எடுத்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு லேபில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன்.

அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்தது தான் என்றார். அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன். நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம். என்னுடைய தந்தைக்கு நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்காது என உருக்கமாக பேசினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?