பல பெண்களுடன் தொடர்பு... நடிகைக்கு பணத்தை வாரி இறைத்த பைனான்சியரை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 9, 2020, 5:58 PM IST
Highlights

இதனால் தான் சொத்தைக் கைப்பற்றுவதற்காக ஆட்களை வைத்து யூசுப்பை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இலங்கையைச் சேர்ந்த யூசுப் என்பவர் குவைத்தில் வேலை பார்த்து வந்த போது இலங்கையைச் சேர்ந்த அசிலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தஞ்சாவூரில் செட்டிலான இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் பைனான்சியர் யூசுப் கடந்த மாதம் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் மேம்பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது வழிமறிக்கப்பட்டு, 6 பேர் கொண்ட கும்பலால் ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

இந்த வழக்கில் திருச்சியில் இருந்த அசிலாவை போலீசார் கைது செய்தனர். முதலில் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்த அசிலா, பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கூலிப்படையை வைத்து கணவரை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருச்சி காந்தி மார்க்கெட் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த பிரகாஷ், திருச்சி மேக்குடியை சேர்ந்த சகாதேவன் மற்றும் தஞ்சையைச் சேர்ந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

 

இதையும் படிங்க: 

இந்நிலையில் அசிலா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதில், கணவர் யூசுப்பிற்கு பல பெண்களுடன் தொடர்பிருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறால் தான் தான் திருச்சியில் தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பண்ணை வீடு, சொகுசு கார், பைனான்ஸ் என கோடிகளில் சொத்து சேர்த்த கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். இடையில் யூசுப் அவருடைய உறவுக்கார பெண்ணான நடிகை ஒருவருக்கு பெரும் தொகையை கடனாக கொடுத்துள்ளார். அதில் இருந்து தான் சிக்கல் ஆரம்பித்துள்ளது. அதனால் பணப்பிரச்சனையில் சிக்கிய யூசுப்பிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. 

 

இதையும் படிங்க: “வனிதாகிட்ட மன்னிப்பு கேட்க முடியாது”... ஒரேயடியாய் தடலாடி காட்டும் தயாரிப்பாளர்...!

இதனால் தான் சொத்தைக் கைப்பற்றுவதற்காக ஆட்களை வைத்து யூசுப்பை கொலை செய்ய திட்டமிட்டேன். பல முயற்சிகளில் தப்பிய யூசுப்பை ஆட்களை வைத்து ஓட, ஓட வெட்டி கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக 15 லட்சம் தருவதாக பேரம் பேசிய அசிலா, தனது காரை விற்று முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததாகவும்  உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். 

click me!