
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'. இந்த படத்தை தயாரித்தது மட்டும் இன்றி, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய, 'வாயாடி பெத்த புள்ள' என்று தொடங்கும் லிரிக்கள் வீடியோ பாடல் வெளியிடப்பட்ட போதே... இரண்டே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இந்த படத்தை இயக்கி இருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக பல கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பட்ட கஷ்டத்துக்கு பலனாக இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். திபு நைனன் தாமஸ் இசையமைக, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தை சிவகார்த்திகேயன், சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு வருடம் ஆகும் நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராத்யா பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல், 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு இவரை சிவகாத்திகேயன் ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.