திருமணமான நடிகருடன் அன்லிமிடெட் லிப்லாக் காட்சியில் நடித்த ராஷ்மிகா மந்தனா - வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

By Ganesh A  |  First Published Oct 11, 2023, 1:54 PM IST

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்லாக் காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.


தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதையடுத்து அப்படத்தை கபீர் சிங் என்கிற பெயரில் அவர் இந்தியிலும் ரீமேக் செய்தார். பாலிவுட்டில் ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான இப்படம் அங்கும் சக்கைப்போடு போட்டது. இதனால் அடுத்தடுத்து பாலிவுட்டில் சந்தீப் ரெட்டிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அந்த வகையில் அவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அனிமல் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தாலும் தற்போதே அப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இன்று அப்படத்தின் ரொமாண்டிக் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நீ வாடி என்கிற அப்பாடலை ராகவ் சைதன்யா, பிரீத்தம் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். ஜேம் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இந்த பாடல் வீடியோ லிப் லாக் காட்சிகள் நிரம்பி உள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர். பாலிவுட் போனதும் ராஷ்மிகா மந்தனா ஆளே மாறிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். திருமணமான நடிகருடன் ராஷ்மிகா மந்தனா லிப்லாக் காட்சியில் நடித்துள்ளது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. 

இதையும் படியுங்கள்... பாரில் குடியும்... கும்மாளமுமாக.. காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்! டேட் நைட் செய்த போட்டோஸ்!

click me!