பாரில் குடியும்... கும்மாளமுமாக.. காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்! டேட் நைட் செய்த போட்டோஸ்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய காதலர் மற்றும் நண்பர்களுடன் பாரில் குடியும் - கும்மாளமுகாக பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ், சிலவற்றை வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Rakul Preeth Singh Debut Movie:
டெல்லியை சேர்ந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், கன்னட திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, '7 /G ரெயின்போ காலனி' படத்தின் ரீமேக்காக கன்னடத்தில் வெளியான 'Gilli' படத்தில் தான் அறிமுகமானார்.
Rakul Reached Tamil Audiance:
இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவான 'யுவன்' படத்தில் நடித்தார். இப்படம் படுதோல்வியை சந்தித்தாலும் தமிழ் பட இயக்குநர்களால் கவனிக்கப்படும் நடிகையாக இருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rakul Tamil movies:
அந்த வகையில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான, 'தடையரை தாக்க', 'புத்தகம்', 'என்னமோ எதோ' என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இந்த படங்களின் தோல்வி, ரகுல் ப்ரீத் சிங்கை ஒரேயடியாக தமிழ் திரையுலகை விட்டு விலக வைத்தது.
Telungu Movies:
ரகுல் ப்ரீத் சிங்கை தமிழ் திரையுலகம் கை விட்டாலும், தெலுங்கு திரையுலகம் கை கொடுத்து தூக்கி விட்டது. பிரபாஸ், மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் 5 வருட பயணம் முடிவுக்கு வந்தது! உறுதி செய்த புகைப்படம்!
Deeran Athigaram Oneru:
நீண்ட இடைவெளிக்கு பின்னரே தமிழில், இயக்குனர் எச்.வினோத் கார்த்தியை வைத்து இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க, இந்த படம் தாறுமாறாக ஹிட் அடித்தது.
Suriya Pair:
இதை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் NGK, போன்ற படங்களில் நடித்தார். சமீப காலமாக ஹிந்தியில் இவர் கவனம் செலுத்தி வருவதால், தென்னிந்திய படங்களில் நடிப்பதை கொடுத்து கொண்டார்.
Rakul Preeth singh Love with Jackky Bhagnani:
எனினும் தமிழில், ஹாரர் படமான போ, அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் விரைவில் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதே போல் அடுத்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரும், தயாரிப்பாரும், நடிகருமான Jackky Bhagnani-யை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Date night Photos:
நேற்றைய தினம் ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய 33-ஆவது பிறந்தநாளை... காதலர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பாரில், குடியும் - கும்மாளமுமாக கொண்டாடியது மட்டும் இன்றி, டேட் நைட் செய்துள்ளார். நைட் வேரில் காதலன் மற்றும், நண்பர்களுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.