ரியல் ஹீரோ எம்.ஜி.ஆர் போல வாழ விரும்புகிறேன்.... இனி இப்படி பட்ட காட்சிக்கு நோ... ரன்வீர் சிங் அதிரடி

 
Published : Feb 05, 2018, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ரியல் ஹீரோ எம்.ஜி.ஆர் போல வாழ விரும்புகிறேன்.... இனி இப்படி பட்ட காட்சிக்கு நோ... ரன்வீர் சிங் அதிரடி

சுருக்கம்

ranveer sing impress to talk actor mgr

ரன்வீர் சிங்:

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், திரையுலகில் தன்னை கவர்ந்த நடிகர் 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்' என கூறியுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங்கை பொறுத்தவரை தன்னுடைய மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் நடிகர்களில் ஒருவர். இவரும் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் காதலித்து வருவதாக பாலிவுட் திரையுலகில்
கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் இது குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இவர்கள் இருவருமே மௌனம் காத்து
வருகின்றனர்.

சர்ச்சை படத்தில் ரன்வீர்:

ராணி பத்மாவதியின் வாழ்கை வரலாற்றை மையம்மாக வைத்து எடுத்த சர்ச்சை திரைப்படமான 'பத்மாவத்' படத்தில் அலாவுதீன் கில்ஜி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ரன்வீர்.

இதே போலவே வரலாற்று திரைப்படமான 'பாஜிராவ் மஸ்தானி' படத்திலும் 'ராம் லீலா' படத்திலும் நடிகை தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் பேட்டி:

இவர் சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியில், சினிமாவில் தன்னை கவர்ந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர் என்று கூறியுள்ளார். 

'திரையுலகை பொறுத்தவரை கட்டுப்பாடு ', ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள் என்று புகழ்துள்ளர். மேலும் மது, புகை என எந்த ஒரு தவறான பழக்கமும் அவரிடம் இருந்தது இல்லை. சினிமாவிலும் அது போன்ற காட்சிகளில் அவர் நடிக்க மறுத்தார். தவறான காட்சிகளில் நடித்தால் அது ரசிகர்களை பாதிக்கும் என நம்பினார் எம்.ஜி.ஆர் என கூறியுள்ளார்.

நிஜ வாழ்கையில் ஹீரோ:

எம்.ஜி.ஆர் சினிமாவில் மட்டும் இன்றி நிஜத்திலும் அனைவருக்கும் ஹீரோ... ஒரு படத்தில் ஓட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் செல்ல வேண்டிய காட்சியில் கூட அவர் நடிக்க மறுத்ததாக கேள்விப்பட்டேன் என மெய்
சிலிர்த்த ரன்வீர். எம்.ஜி.ஆர் படங்களின் மூலம் மக்களுக்கு சொன்ன அறிவுரைகளை நிஜத்தில் அவருடைய வாழ்க்கையிலும் கடைபிடித்தவர் என்று பெருமை சூட்டினார்.

எம்.ஜி.ஆரை பின்பற்றும் ரன்வீர்:

எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்ட ரன்வீர் சிங் இனி தானும் எம்.ஜி.ஆரின் சில கொள்கைகளை படங்களில் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இனி மது அருந்துவதுப் போல் எந்த படக்காட்சியிலும் நடிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!