Latest Videos

'விசுவாசம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக 'ஸ்ரத்தா ஸ்ரீநாத்'?

First Published Feb 5, 2018, 4:19 PM IST
Highlights
visuvasam movie heroine sharatha srinath


விசுவாசம்:

தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள 'விசுவாசம்' படம் குறித்து தினந்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. எப்போதும் படத்தின் பெயரில் சஸ்பென்ஸ் வைக்கும் சிவா இப்போது 'விசுவாசம்' படத்தில் அஜித்துக்கு ஜோடி யார்? என கூறாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வம்:

தல ரசிகர்களுக்கு அஜித் படம் குறித்து எந்த ஒரு தகவல் வெளியானாலும் அதனை வைரலாக்கி விடுவார்கள். ஏற்கனவே இந்த படத்தில் 'தல' இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், இவர் தாதா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனிப்போட்டது.

நாயகி யார்?

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'மீசைய முறுக்கு' படத்தில் ஹிப் ஹோப் ஆதிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஆத்மிக்க இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் ஆத்மிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் வதந்தி என கூறினார்.

மேலும் அனுஷ்காவை நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது 'விக்ரம் வேதா' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை 'ஸ்ரத்தா ஸ்ரீநாத்' அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக வில்லை. எனினும்  இந்த வாரத்திற்குள் நாயகி குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

click me!