நடிகை திவ்யா உன்னி இரண்டாவது திருமணம்...!

actress divya unni second marriage
actress divya unni second marriage


கடந்த 2016ஆம் ஆண்டு கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற நடிகை திவ்யா உன்னி அருண்குமார் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார்.

நடிகை திவ்யா உன்னி:

Latest Videos

மலையாளத் திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்மான நடிகை திவ்யா உன்னி, சிறந்த பரத நாட்டிய கலைஞர். மலையாளம் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர்.actress divya unni second marriage

இவர் தமிழில் நடித்த 'வேதம்', 'பாளையத்தம்மன்', 'சபாஷ்', 'கண்ணன் வருவான்' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்:

திவ்யா உன்னி முன்னணி நடிகையாக இருக்கும் போதே, அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதீர் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு, அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். இவர்களுக்கு அர்ஜூன் மற்றும் மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விவாகரத்து:

நடனத்தின் மீது திவ்யா உன்னிக்கு அதிக ஆர்வம் இருந்ததால் இவர் அமெரிக்காவில் நனடப்பள்ளிகள் திறப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்ததாகத் தெரிகிறது. இது அவருடைய கணவர் சுதீருக்கு பிடிக்கவில்லை... இதனால் ஏற்ப்பட்ட கருத்து வேறுப்பாடு விவாகரத்தில் முடிந்தது. 

2016 ஆம் ஆண்டு கணவர் சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

மறுமணம்:

இந்நிலையில் இவருக்கும் மும்பையைச் சேர்ந்த கேரள இளைஞர் அருண்குமார் என்பவருக்கும் நேற்று ஹூஸ்டானில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர்.

திவ்யா உன்னி தற்போது திருமணம் செய்துக்கொண்டுள்ள இளைஞர் அருண்குமார் இன்ஜினீயராக ஹூஸ்டனில் வேலைப்பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image