
ஆரம்பமே அசத்தல்:
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி நடிகர் சூர்யாவிற்கு திருப்பு முனையாக அமைந்த 'நந்தா' படத்தில் 'லொடுக்கு பாண்டி' என்கிற கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் காமெடி நடிகர் கருணாஸ். முதல் படத்திலேயே அவருடைய காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டதால் தொடர்து பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளது மட்டும் இன்றி தமிழில் பல படங்களை இயக்கி தயாரித்து கதாநாயகனாவும் நடித்துள்ளார். ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.
அரசியல் களம்:
பாடகர், நடிகர், இயக்குனர் என பல்வேறு திறமைகளை கொண்ட இவர் அரசியலையும் விட்டு வைக்க வில்லை. 'முக்குலத்தோர் புலிப்படை' என்கிற கட்சியைத் துவங்கி அதன் தலைவராகவும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ வாகவும் பதவி வகித்து வருகிறார்.
தொழிலதிபர்:
இது நாள் வரை சினிமா மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது தொழிலதிபர் அவதாரம் எடுத்துள்ளார். கடந்த நான்காம் தேதி அன்று திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோடு என்ற இடத்தில் பாரம்பரிய உணவுகளை மீட்டேடுப்போம் என்கிற கொள்கையுடன் 'ரத்தின விலாஸ்' என்கிற உணவகத்தை துவங்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.