
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சிக்கலான அரசியல் சூழலில், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் அவருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகை ரஞ்சனி தனது சமூகவலைத்தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.அதில் , இது தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல அதிமுகவுக்கும் கருப்பு தினம் என்றும் , அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். சாரின் கனவுகளை மன்னார்குடி மாபியா தகர்த்ததை நினைத்து என் இதயத்தில் ரத்தம் கசிகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி வரலாறு சிறப்புமிக்க போராட்டத்தை நிகழ்த்திய தமிழக மக்கள், ஏன் சித்தப்பா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்று கேட்டுள்ளார். மேலும், மறுதேர்தல் வேண்டும் என்று கோரிக்கை விடுங்கள் என ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.