'நரகாசுரன்' மூலம் தமிழுக்கு வரும் சமந்தா காதலர்...

 
Published : Feb 17, 2017, 05:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
'நரகாசுரன்' மூலம் தமிழுக்கு வரும் சமந்தா காதலர்...

சுருக்கம்

நடிகை சமந்தாவின் காதலரான பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, 'நரகாசுரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த 'துருவங்கள் 16' படதின் இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கவிருக்கும்  'நரகாசுரன்' திரைப்படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைத்து  நாகசைதன்யா நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்தா 2010ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நாகசைதன்யா நடித்தார் என்பது குறிப்பிடதக்கது. 

திகில் கலந்த படமாக உருவாகவுள்ள 'நரகாசுரன்' திரைப்படத்தை தமிழில் மட்டும் எடுக்கிறார்களா அல்லது தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாக்குகிறார்களா என்பது குறித்த தகவல் இன்னும்  வெளியாகவில்லை. ஜூன் மாதம்  படப்பிடிப்பு துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!