ரன்வீர் சிங்கை பார்த்து பயந்தேன்.... சொல்கிறார் ரீல் மனைவி அதிதி...

 
Published : Feb 08, 2018, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ரன்வீர் சிங்கை பார்த்து பயந்தேன்.... சொல்கிறார் ரீல் மனைவி அதிதி...

சுருக்கம்

Ranevar Singh got scared

மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் கார்த்தியின் காதலியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அதிதி ராவ். இவர் அமீர்கானின் மனைவி கிரண் ராவின் நெருங்கிய உறவினராவார்.


மெஹருன்னிஸா
பல தடைகளுக்கு பின் பாலிவுட்டில் வெளியான படம் பத்மாவத். இதில் முரட்டு வில்லனான அலாவுதீன் கில்ஜியின் கதாபாத்திரத்தில் நடித்த ரன்வீர் சிங்கின் மனைவியாக மெஹருன்னிஸா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதிதி ராவ்.

இந்நிலையில் பத்மாவத் படம் பற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது.


உழைப்பு
பத்மாவத் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக எல்லோரும் கடுமையாக உழைத்தார்கள் என்பது எனக்கு தெரியும்.

பிராத்தனை
பத்மாவத் பட செட்டில்  இருந்த அனைவரும் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தனர். அனைவரின் பிராத்தனைத்தான் படத்தை வெற்றி பெற செய்துள்ளது.

சர்ப்பிரைஸ்
என்னுடைய கதாபாத்திரம் சர்ப்பிரைஸ் ஆக இருக்கட்டும் என்று இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி என் புகைப்படத்தை போஸ்டரில் போடவில்லை.என்னை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள சொல்லவில்லை.

பாராட்டு

என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் பாராட்டியதை  பார்த்து நான் அழுதுவிட்டேன்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங் செட்டில் இருக்கும் போது கில்ஜியாகவே மாறி விடுவார்.கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிப்பார். சில சமயம் அவர் என்னை பார்த்த போது எனக்கு பயமாக இருந்தது. ஆனால் என் கதாபாத்திரம் மிகவும் தைரியமானது என்றார் அதிதி ராவ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!