சினேகாவின் படவாய்ப்புகளை கெடுத்த கலா மாஸ்டர்.... அதிர்ச்சியில் கோலிவுட்

 
Published : Feb 08, 2018, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
சினேகாவின் படவாய்ப்புகளை கெடுத்த கலா மாஸ்டர்.... அதிர்ச்சியில் கோலிவுட்

சுருக்கம்

kala master and sneha issue

தமிழில் அறிமுகம்

2001 ம் ஆண்டு ”நீலபக்சி” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சினேகா ”என்னவளே” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.

முன்னணி ஹீரோக்கள்

மம்முட்டியுடன் ஆனந்தம் படத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தார்.இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. தொடர்ந்து கமல்,விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.

திருமணம்

2009 ம் ஆண்டு பிரசன்னாவுடன் இணைந்து ”அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் நடித்ததிலிருந்து இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.இதன் பிறகு 2012 ம் ஆண்டு மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.தற்போது இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது.

இயல்பான நடிப்பு

கடந்த ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் வெளியான ”வேலைக்காரன்” படத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக இயல்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சினேகா.

கலா மாஸ்டர்

இந்தநிலையில் சினேகாவுக்கும் டான்ஸ் மாஸ்டர் கலாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அது பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சினேகா நடித்த எல்லா படங்களும் பெரும்பாலும் ஹிட்டான படங்கள்தான்.ஹிட் படங்களை கொடுத்த சினேகா ஒரு காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தாராம்.இதற்கு முழு காரணம் கலா மாஸ்டராம்.

சினேகா கெட்டவர்

சினேகாவின் அண்ணனை திருமணம் செய்து கொண்டார் கலா. அதன்பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.இந்நிலையில் சினேகாவிற்கு நடனமாட நடிப்பதற்கு தெரியாது என்றும் அவர் கெட்டவர் என்றும் கலா மாஸ்டர் கூறியதால் சினேகாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாம்.

மறக்க முடியாத நபர்

இதனால் சினேகா வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் என்றால் அது கலா மாஸ்டர் தானாம். அதன் பின்பு இரண்டு வருட இடைவேளைக்கு பின் உலகநாயகன் கமல்ஹாசன் தனது ”வசூல் ராஜா எம்பிபிஎஸ்” படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் பிறகே சினேகாவுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!