பெண் கெட்டப்பில் இனி நடிக்க மாட்டேன்......என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா புகழ் ராமர் தகவல்..!

 
Published : Feb 08, 2018, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
பெண் கெட்டப்பில் இனி நடிக்க மாட்டேன்......என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா புகழ் ராமர் தகவல்..!

சுருக்கம்

vijay tv scoop comedian ramer annoucement

குட்டு வாங்கினாலும் நட்சத்திர கையால் குட்டு வாங்க வேண்டும் என்ற பழமொழி உண்டு. அது போல விஜய் டிவியில் வந்தால் போதும் வெள்ளித்திரையில் கால் பதித்து விடலாம் இது புதுமொழி.

வெள்ளித்திரை

விஜய் டிவியில் வந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர்களின் பட்டியலில் சந்தானம்,சிவகார்த்திகேயன்,ரோபோ சங்கர்,ப்ரியா பவானி ஷங்கர் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ராமர்

இந்தநிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”சிரிச்சா போச்சு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராமர்.இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கலாய்த்து என்னம்மா இப்படி பண்ரீங்களேம்மா என்று ஒரு டயலாக் பேசினார். இந்த ஒரே டயலாக் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார் ராமர்.இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.

சினிமா

நடுவில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசும் போது பல அவமானங்கள் போராட்டங்களுக்கு பிறகுதான் இப்படி ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன்.

பெண் வேடம்

நான் பெண் வேடம் போடுவதை தவிர்த்து வருகிறேன்.இனி என்னை அப்படி ஒரு கெட்டப்பில் பார்க்க முடியாது. என் மனைவி, குழந்தைகளுக்கு நான் பெண் கெட்டப் போடுவது பிடிக்கப்போவதில்லை. ஒரு வேளை முக்கியமான தருணம் என்றால் பெண் வேடம் போடுவேன் என்றார்.

சோகம்

ராமர் பெண் கெட்டப் போட்டு வந்தாலே கூட்டத்தில் விசில் பறக்கும். இவரது பெண் வேடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ராமர் இப்படி தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!