
பிக்பாஸ் அல்டிமேட் :
விஜய் டிவியை தொடர்ந்து தற்போது அல்டிமேட் என்னும் பெயரில் பிக்பாஸ் டிஸ்னி ப்ளஸில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய போட்டியாளர்கள் 14 பெயருடன் துவங்கிய இந்நிகழ்ச்சி. பிக்பாஸ் 5 வது சீசன் வரை கலந்து கொண்டு வெற்றியடையாத ஹவுஸ்மேட்ஸ் கலந்து கொண்டனர். இதில் தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, வனிதா, அனிதா, ஜுலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி :
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பாதியில் வைல்ட் கார்ட் என்ட்ரியின் மூலம் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தியும் அவரோடு கேபிஒய் சதீஸ் முதலில் வந்தனர். பின்னர் விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...Beast: விஜய்க்கு முன்னரே பீஸ்ட் படத்தை முதலில் பார்த்த நபர்...நெல்சன் கூறிய அந்த நபர் யார் தெரியுமா..
வாக்கவுட் செய்த போட்டியாளர்கள் :
கமல் விலகிய பின்னர் வனிதா திடீரெனமனா அழுத்தம் காரணமாக தானாகவே வெளியில் சென்றுவிட்டார். இவரை அடுத்து உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார்.
15 லட்சத்துடன் வெளியேறிய போட்டியாளர் :
பின்னர் எப்போதும் போல பணத்துடன் வெளியேறும் வாய்ப்பை இந்த முறை ஸ்ருதி தட்டி சென்றார். ஆனால் பலபரீட்சை போட்டி நடத்தப்பட்ட பிறகே பணம் வழங்கப்பட்டது. அதோடு மீண்டும் பணத்தை பெரும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஸ்ருதி வெளியில் சென்றபிறகு 25 லட்சத்துடன் மேடையில் தோன்றிய சிம்பு இந்த பணத்தை பெற டாஸ்க் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Actor Vijay: யாரையும் இழிவுபடுத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் நடிகர் விஜய்..
கால் உடைந்த ரம்யா பாண்டியன் :
இறுதி கட்டம் நெருங்க நெருங்க டாஸ்குகள் கடுமையாக்கப் படுகிறது. இதனால் ஹவுஸ்மேட்ஸ் இடையே கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளது. முன்னதாக டாஸ்கின் போது நிரூப் -க்கு அடிபட்டது. இதையடுத்து இன்றைய ப்ரோமோவில் ரம்யா பாண்டியன் காலில் கட்டுடன் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.