Actor Vijay: யாரையும் இழிவுபடுத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் நடிகர் விஜய்..!

Published : Apr 07, 2022, 08:02 AM IST
Actor Vijay: யாரையும் இழிவுபடுத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் நடிகர் விஜய்..!

சுருக்கம்

சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்ற கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக நடிகர் விஜயும், முதல்வர் ஸ்டாலினும் திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்டனர். 

யாரையும் எக்காலத்திலும் இழிவு படுத்தும் வகையில் பத்திரிக்கை, இணைய தளங்களில் போஸ்டர்களின் என எந்தத்தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது என்று விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்ற கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக நடிகர் விஜயும், முதல்வர் ஸ்டாலினும் திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பை மேற்கொள் காட்டி சில கிண்டல் பதிவுகளும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய படம் அடுத்த வாரம் வெளியவர உள்ள சூழலில் அதை வைத்தும் சிலர் அரசியல் தொடர்பான பதிவுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது என விஜய் மக்கள் இயக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

யாரையும் இழிவுபடுத்தக்கூடாது

இதுதொடர்பாக விஜய் மக்கள்  இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அரசுப்பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவு படுத்தும் வகையில் பத்திரிக்கைகளில், இணைய தளங்களில், போஸ்டர்களின் என எந்தத்தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

கடும் நடவடிக்கை 

இது நம்முடைய தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.

 

சட்டப்படி நடவடிக்கை பாயும்

இருப்பினும் நம் தளபதி அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த்  தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

முத்துவுக்கு வில்லியாக மாறும் மீனா... கிரிஷை பகடைக்காயாக யூஸ் பண்ணும் ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்
அறிவுக்கரசியின் பிளானை வாஷ் அவுட் பண்ணிய தர்ஷினி... முல்லைக்கு விழுந்த தர்ம அடி - எதிர்நீச்சல் தொடர்கிறது