
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்துக்குள் கார் ஒன்று 200 மீட்டர் தூரத்துக்கு பறந்து சென்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது தெலுங்கு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு என தெரியவந்ததால், தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கோஸ்ட். இப்படத்தை இயக்குனர் பிரவீன் சட்டாரு இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக சோனல் சவுகான் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
"
இப்படத்தின் படப்பிடிப்பு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்திய படக்குழு அண்மையில் உதகை அருகே குன்னூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நடத்தப்பட்டது. அப்போது அங்கு கார் அந்தரத்தில் பறக்கும் படியான ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
சிலர் அது உண்மையிலேயே நடந்த விபத்து என்று கூறி வந்த நிலையில், அது படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட காட்சி என்பது பின்னர் உறுதியானது. இந்தக் காட்சியை படக்குழு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படமாக்கி உள்ளது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Thalapathy 66 : அட்ராசக்க... முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி! ‘தளபதி 66’ல் சரத்குமாருக்கு இப்படி ஒரு வேடமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.