
ஆல்யா மானசா, தன்னுடைய மகனை முதன் முறையாக கையில் ஏந்தும் அழகிய, நெகிழ்ச்சி வீடியோவை பதிவு செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானவர் ஆல்யா மானசா. இவர் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவர், தன்னுடன் “ராஜா ராணி 1” சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
ஆல்யா மானசா ராஜா ராணி 2 பயணம்:
ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, முக்கிய நாயகியாக நடித்து வந்தார். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக அப்போதும் நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முள்பு வரை நடித்துள்ளார். அண்மையில் அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார்.
அதுமட்டுமில்லை, குழந்தை பிறந்த பிறகு 3 மாதம் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஆல்யா மீண்டும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, இனிமேல் சந்தியாவாக வர மாட்டேன் எனவும் ஆல்யா கூறி இருந்தார்.
ஆல்யாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை:
இதையடுத்து, ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கடந்த மார்ச் 27ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.
சஞ்சீவ்-ஆல்யா இருவரும் யூடியூப் சேனல் வைத்துள்ளனர். அதில் தங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். இவர்க்ளுக்கு ஏராளமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
ஆல்யா குழந்தையை கையில் ஏந்தும் நெகிழ்ச்சி தருணம்:
இந்நிலையில், ஆல்யா மானசா தன்னுடைய மகனை முதன் முறையாக, கையில் ஏந்தும் அழகிய தருணம் நிறைந்த நெகிழ்ச்சி வீடியோவை பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.