RK Selvamani : சர்ச்சை பேச்சால் வந்த சிக்கல்... இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்

Published : Apr 06, 2022, 01:52 PM IST
RK Selvamani : சர்ச்சை பேச்சால் வந்த சிக்கல்... இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்

சுருக்கம்

RK Selvamani : சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர்.கே செல்வமணி. நடிகை ரோஜாவின் கணவரான இவர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருந்து வருகிறார். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும், முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசும் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர். அப்போது பைனான்சியர் போத்ரா என்பவர் குறித்து சில கருத்துக்களை அவர்கள் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சினிமா பைனான்சியர் போத்ரா, இயக்குனர் ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசுஆகியோர் மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் அவர்கள் இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்ட சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படியுங்கள்... Oh My Dog : பீஸ்ட் ரிலீசான மறுவாரமே அதிரடியாக களமிறங்கும் சூர்யா படம்... திடீர் அறிவிப்பால் ஷாக்கான ரசிகர்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்: First அண்ட் Last யார் தெரியுமா?
அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்