RRR Second Single: வேற லெவல் டான்ஸ்! 'நாட்டு கூத்து' லிரிக்கல் பாடலில் மிரட்டிய ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர்

Published : Nov 10, 2021, 06:41 PM IST
RRR Second Single: வேற லெவல் டான்ஸ்! 'நாட்டு கூத்து' லிரிக்கல் பாடலில் மிரட்டிய ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர்

சுருக்கம்

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள 'RRR ' திரைப்படத்தின் 'நாட்டு குத்து' பாடலின் ப்ரோமோ நேற்று வெளியான நிலையில் தற்போது லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.  

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள 'RRR ' திரைப்படத்தின் 'நாட்டு குத்து' பாடலின் ப்ரோமோ நேற்று வெளியான நிலையில் தற்போது லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு   “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு அனுமதி கொடுத்த பின்னர் மீண்டும் படப்பிடிப்பை துவங்கிய படக்குழுவினர் தற்போது இந்த படத்தை முழுவதுமாக முடித்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளும் இப்போதே துவங்கி விட்டது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கீரவாணி இசையில் அனிரூத் பாடிய, 'நட்பு' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டு, இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி சற்று முன்னர், ராம் சரண் மற்றும் jr என்.டி.ஆர் நடனத்தில் மிரட்டியுள்ள  நாட்டு கூத்து பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் மேக்கிங் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலேசியா கார் ரேஸ்... முதல் சுற்றிலேயே ரிப்பேர் ஆகி நின்ற அஜித் கார் - கடும் அப்செட்டில் ரசிகர்கள்
நந்தினிக்காக சுந்தரவள்ளியை பகைத்துக்கொள்ளும் சூர்யா... சவாலில் வெல்லப்போவது யார்? மூன்று முடிச்சு சீரியல்