ராமர் கோவில் திறப்பு.. முதல் நாள் நடக்கும் விருந்து.. மொத்த செலவையும் ஏற்ற பிரபாஸ் - எத்தனை கோடி தெரியுமா?

By Ansgar RFirst Published Jan 18, 2024, 5:45 PM IST
Highlights

Actor Rebel Star Prabhas : பிரபாஸ் மிகப்பெரிய புகழ் நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை தாண்டி பல நல்ல குணங்கள் கொண்ட மனிதராகவும் அவர் திகழ்ந்து வருகின்றார்.

வீட்டுக்கு வருபவருக்கு விருந்தோம்பல் செய்வதில், அக்கால அரசர்களை போல இந்த காலத்தில் திகழ்ந்து வருகின்றார் "யங் ரெபெல் ஸ்டார்" பிரபாஸ். அன்னதானம் பற்றி பேசும்போது முதலில் ரெபெல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜு மற்றும் அவரது வாரிசான யங் ரெபல் ஸ்டார் பிரபாஸ் தான் நினைவுக்கு வருவார்கள். சக நடிகர்கள் முதல் செட் பாய்ஸ் வரை பலரும் பிரபாஸ் வீட்டில் உணவு சாப்பிட்டுள்ளனர். 

பிரபாஸ் பங்கேற்கும் ஷூட்டிங் என்றாலே அவர் செட்டில் என்ன சாப்பிடுகிறாரோ தனது செட்டில் உள்ள அனைவருக்கும் அதே மாதிரியான சாப்பாடு தான் ஏற்பாடு செய்வாராம். மேலும் பிரபாஸ் வீட்டில் உணவு சாப்பிட்ட ஹீரோயின்கள், மற்ற மொழி நடிகர்கள் அவரை பலமுறை பாராட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

ராமர் கோயில் திறப்பு விழா: ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை!

அண்மையில் சலார் பட நேர்காணலில் கூட பிரபாஸின் குணம் குறித்து பேசி பிரமித்துப்போனார் மலையாள நடிகர் பிரிதிவிராஜ். இதுஒருபுரம் இருக்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு என்ற கனவு நனவாக உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி ராம் லல்லாவின் பிராணபிரதிஷ்டா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காண நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் வருகை தரவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொது மக்களும் கலந்து கொள்ள உள்ளனர். அயோத்திக்கு வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ராம பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சூழலில் அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கான சாப்பாட்டு செலவு பிரபாஸ் முற்றிலும் ஏற்றுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ராமர் கோவில் திறப்பையொட்டி, அயோத்தியில் சுமார் 300 இடங்களில் உணவளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்பு நாளன்று பிரபாஸ் அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், அயோத்தி பிரதிஷ்டை நாளில் மட்டும் சாப்பாடு செலவு சுமார் 50 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு செலவையும் ஏற்க பிரபாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷூட்டிங் நேரத்திலும் கூட பிரபாஸிற்கு தனியாக சாப்பிடும் பழக்கம் இல்லையாம். மதிய உணவு என்றால், ஷூட்டிங் லொகேஷனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் ரெபெல் ஸ்டார் உணவு ஆர்டர் செய்து, அன்றைய செலவுக்கு 2 முதல் 3 லட்சம் வரை அளிப்பாராம்.

பிரபாஸின் சாப்பாட்டில் எத்தனை வகையான உணவுப் பொருட்கள் இருக்குமோ... மற்ற ஊழியர்களின் தட்டுகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறுவாராம். கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்குப் பிறகு.. பிரபாஸும் பேட கர்மா தினத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு சாப்பாடு செய்தார். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தார். தற்போது அயோத்தியில் 50 கோடி ரூபாய் செலவு செய்து.. உணவு தானம் செய்து மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார் பிரபாஸ்.

இது தான் ராமராஜ்ஜியம்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சத்குரு பாராட்டு..

click me!