Ram Charan: சம்பள விஷயத்தில் விஜய், அஜித்தை மிஞ்சிய ராம்சரண்... ஷங்கர் படத்தில் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா?

Ganesh A   | Asianet News
Published : Dec 27, 2021, 04:21 PM ISTUpdated : Dec 28, 2021, 07:39 AM IST
Ram Charan: சம்பள விஷயத்தில் விஜய், அஜித்தை மிஞ்சிய ராம்சரண்... ஷங்கர் படத்தில் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா?

சுருக்கம்

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் (RRR movie) படத்தில் நடித்து முடித்துள்ள ராம்சரண் (Ramcharan) தற்போது ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. காரணம், அவர்கள் நடிக்கும் படங்கள் தற்போது இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியிடப்படுகின்றன. இதனால் தெலுங்கு நடிகர்கள் பலரும் தங்களது சம்பளத்தை தொடர்ந்து உயர்த்திய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளதன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள அல்லு அர்ஜுன், தற்போது தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளாராம். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு அவர் ரூ.100 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் 60 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் (Ajith), விஜய் (Vijay) போன்றவர்கள் முறையே 70 முதல் 80 கோடி ரூபாய் அளவு சம்பளம் வாங்கி வரும் நிலையில், தெலுங்கில் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ள ராம்சரண் (Ramcharan) ரூ.100 கோடி சம்பளமாக வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் நடிகர்களுக்கு அதிகளவு சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் சமீப காலமாக தமிழ் திரையுலகை சேர்ந்த் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விரைவில் இவர்களும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!