Salman khan: 3 முறை பாம்பு கடித்தது எப்படி? 6 மணிநேர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சல்மான் ஷாக் தகவல்!

Published : Dec 27, 2021, 03:14 PM IST
Salman khan: 3 முறை பாம்பு கடித்தது எப்படி? 6 மணிநேர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சல்மான் ஷாக் தகவல்!

சுருக்கம்

நடிகர் சல்மான் கான் (Salman khan) நேற்று பாம்பு கடி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 6 மணிநேரம் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், தன்னை பாம்பு 3 முறை கையில் தீண்டியது எப்படி என்பது குறித்த தகவல் பிரபல இணையதம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

நடிகர் சல்மான் கான் நேற்று பாம்பு கடி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 6 மணிநேரம் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், தன்னை பாம்பு 3 முறை கையில் தீண்டியது எப்படி என்பது குறித்த தகவல் பிரபல இணையதம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்று சல்மான் கான் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக தன்னுடைய பன்வெல் பண்ணை வீட்டில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். கடந்த சில வருடங்களாகவே... இங்கு தான் அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் நேற்று அதிகாலையில் இருந்தே நடந்து வந்துள்ளது.  மேலும் சல்மான் கானுக்கு நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக தோட்ட பகுதியில் அதற்கான பணியில் சல்மான் காணும் ஈடுபட்டிருந்தார்.

மேலும் செய்திகள்: நீங்கள் முட்டாள்களா? குடும்பத்தை கெடுத்த அன்னபூரணியின் ஆதிபராசக்தி அவதாரத்தால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன்!

 

சல்மான் கான் தன்னுடைய 56 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் அனைவருமே பன்வெல் பண்ணை வீட்டில் இருந்த நிலையில், திடீர் என... குழந்தைகள் இருந்த அறை ஒன்றில் பாம்பு புகுந்துள்ளது. இதை பார்த்து குழந்தைகள் பயம் கொண்டதால், பாம்பை ஒரு குச்சி மூலம் வெளியே எடுத்து செல்ல சல்மான் கான் முயன்றுள்ளார். அப்போது அந்த பாம்பு மூன்று முறை அவரது கையில் கண்டித்துள்ளது. அது விஷ பாம்பாக இருக்கும் என்கிற பயத்தால், சல்மான் கானை மருத்துவமனையில் அனுமதித்த அவரது குடும்பத்தினர் பாம்பையும் தங்களுடன் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Janhvi Kapoor Latest: பம்பரமாய் சுழன்று.. உடலை வளைத்து நெளித்து படு ஹாட் கவர்ச்சியில் பாடாய் படுத்தும் ஜான்வி

 

பின்னர் அது விஷ பாம்பு இல்லை என்பது தெரிந்த பின்னரும், சல்மான் கானுக்கு பாம்பு கடியால் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதை சுமார் 6 மணிநேரம் கண்காணித்து உரிய சிகிச்சை அளித்தபின்னரே... டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட இருந்த நேரத்தில் தனக்கு இப்படி நடந்தது குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார் சல்மான் கான்.

மேலும் செய்திகள்: Snake bites singer Maeta: கவர்ச்சி உடையில் பாம்போடு ஹாட் வீடியோ! பாடகி முகத்தில் கடித்த அதிர்ச்சி வீடியோ

 

மேலும் தற்போது தான் நன்றாக இருப்பதாகவும், தன்னை பாம்பு கடித்திருந்தாலும் அதனை நான் கொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக அதனை விடுத்ததாகவும் தேர்விய்துள்ளார். சல்மான் கான் இன்று தன்னுடைய 56வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?