
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துள்ள படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
இந்த பாடல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. கடந்த டிசம்பர் 17-ந் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. ரிலீசுக்கு பின் இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படம் ரூ.229 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது
இந்நிலையில், புஷ்பா படத்தின் கிளைமேக்ஸ் குறித்து பகீர் தகவலை இயக்குனர் சுகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி கிளைமாக்ஸில் அல்லு அர்ஜுனும், பகத் பாசிலும் நிர்வாணமாக சண்டையிடுவது போன்று எடுக்க திட்டமிட்டபட்டதாம்.. பின்னர் பஞ்சாயத்துக்கு பயந்து அந்த முடிவை மாற்றியதாக கூறியுள்ளார் இயக்குனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.