
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். வித்தியாசமான கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் தீரம் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார்.
இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. இது ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத். இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித் தனது அடுத்த படமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.
இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இதேபோல் எச்.வினோத், கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ‘சதுரங்க வேட்டை 2’ (Sathuranga vettai 2) படமும் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதாம். இப்படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இப்படத்தை சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கி உள்ளார்.
சம்பள விஷயத்தில் இப்படத்தின் நாயகன் அரவிந்த் சாமிக்கும், தயாரிப்பாளர் மனோபாலாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கி இருந்தது. தற்போது அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
எச்.வினோத்தின் வலிமை படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதால், அவர் பணியாற்றியுள்ள இப்படத்தையும் அடுத்த மாதமே வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் எனக் கருதி, ஜனவரி மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.