
எந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனாலும், அந்த பாடல் எதில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதையும் விலாவாரியாக அலசி ஆராய்ந்து கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். பாடல் மட்டும் அல்ல எந்த படத்தின் காட்சி, எந்த மொழி படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் அதனை பக்காவாக கண்டுபிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது, 'ஜெய்பீம்' படத்தில் இடம்பெற்ற 'தல கோதும் இளம் காத்து' பாடலின் மெட் எந்த பாடலின் அட்ட காப்பி என்பதையும் வீடியோ போட்டு கலாய்க்க துவங்கி விட்டார்கள்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான 'ஜெய்பீம்' படம் ஓடிடி இணையதளத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு சில சர்ச்சைகளையும் சந்தித்து. குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் கொடுமை காரர்களாக சித்தரித்துள்ளதாக அடுத்தடுத்து பல பிரச்சனைகளை ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எதிர்கொண்டார் நடிகர் சூர்யா.
மேலும் இந்த படத்தின் இயக்குனர் ஞானவேல்... வேண்டும் என்றே எதையும் செய்யவில்லை என்றும், இதில் இடம்பெற்ற காட்சிகள் யார் மனத்தையேனும் புண் படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார். எனினும் இந்த பிரச்சனை ஒருவிதம் விடாமல் எரிந்து கொண்டிருந்தாலும், சர்வதேச விருதுகளுக்கு இப்படம் பரிசீலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் சீன் ரோல்டன் இசையில்... ராஜு முருகன் பாடல் வரிகள் எழுதி, பிரதீப் குமார் பாடிய 'தல கோதும் இளம் காத்து சேதி கொண்டுவரும் பாடலின்' இசை எந்த பாடலில் இருந்து சுடப்பட்டது என்பதை தான் வீடியோ போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் படத்தில், சீன் ரோல்டன் இசையில், பிரதீப் குமார் மற்றும் நித்யஸ்ரீ பாடிய... 'கண்ணமூடி மூடி கண்டகனவே' பாடலின் இசையை சுட்டு தான் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் சீன் ரோல்டன்.
அதே போல்... ஜெயம் படத்தில் இடம் பெட்ரா 'கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே... பாடலின் இசையும் இந்த இரு பாடல்களுடன் தொடர்புடையது என்பதையும், குறிப்பிட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே அனிரூத், போன்ற பல இசையமைப்பாளர்கள் இது போன்ற காப்பி கேட் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது சீன் ரோல்டன் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.