ராமராக ராம் சரண்... தாறுமாறு வைரலாகும் பிரபல இயக்குநரின் பிரம்மாண்ட பட கேரக்டர் லுக் போஸ்டர்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 26, 2021, 7:02 PM IST
Highlights

கையில் வில்லேந்தி அப்படியே ராமர் போல் காட்சியளிக்கும் ராம் சரணின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு  இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அல்லுரி சீதாராமராஜு எனும் புரட்சியாளரின் கதை தான் ஆர்.ஆர்.ஆர். படமாக உருவாகி வருகிறது.இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.,  அஜய் தேவ்கன்,  ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில் பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் இந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போதே புரமோஷன் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. 

ஹீரோ ராம்சரண் அல்லுரி சீதாராஜாராமு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், ஆலியா பட் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆலியா பட்டின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டார். அது சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து கையில் வில்லேந்தி அப்படியே ராமர் போல் காட்சியளிக்கும் ராம் சரணின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த திரையுலகையே பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் போஸ்டர் வடிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!