இரண்டு நாட்களில்... 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'கர்ணன்' டீசர்! படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

Published : Mar 25, 2021, 09:04 PM IST
இரண்டு நாட்களில்... 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'கர்ணன்' டீசர்! படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

சுருக்கம்

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் அடுத்த மாதம், 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் நேற்று முன்தினம், அதாவது மார்ச் 23 ஆம் தேதி அன்று வெளியாகி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் அடுத்த மாதம், 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் நேற்று முன்தினம், அதாவது மார்ச் 23 ஆம் தேதி அன்று வெளியாகி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கர்ணன்'.  ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக, இதுவரை 'கண்டா வரச்சொல்லுடா', 'பண்டாரத்தி புராணம்', மற்றும் 'திரௌபதி முத்தம்' ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் வெளியான இந்த படத்தின், டீசர் இதுவரை 8 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

கர்ணன் பட டீசர்... உழைக்கும் வர்கத்தின் கதை என்பது இந்த படத்தை டீசரில் இருந்த தெரிந்தது . டீசரின் துவக்கத்திலேயே, பருந்து ஒன்று கோழி குஞ்சுகளை தூக்கி செல்வது போல் காட்டப்படுகிறது. இதுவே இந்த படம் குறித்த பல யுகங்களை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. கண்ணீர் மல்க அமர்ந்திருக்கும் மக்கள்... தனுஷ் குதிரையில் கையில் வாலுடன் கொடுக்கும் என்ட்ரி வேற லெவலில் உள்ளது. மக்களும் ஒருத்தனையும் விடாத கர்ணா... அடிச்சி துரத்து என ஆக்ரோஷம் வெளிப்பட்டது. 

இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான, பரியேறும் பெருமாள் திரைப்படம் போல் இந்த படமும் சமூக ரீதியான பிரச்னையை கூற வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த அப்படத்தில், இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!