பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வீட்டுக்கே சென்று விருது வழங்கி கெளரவம்..!

By manimegalai aFirst Published Mar 25, 2021, 8:16 PM IST
Highlights

பிப்ரவரி மாதம், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகத்தில் 'கலைமாமணி' விருது பெற்ற கலைஞர்களுக்கு, பதக்கம் மற்றும் அதற்கான சான்றிதழை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கௌரவித்தார்.
 

பிப்ரவரி மாதம், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகத்தில் 'கலைமாமணி' விருது பெற்ற கலைஞர்களுக்கு, பதக்கம் மற்றும் அதற்கான சான்றிதழை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கௌரவித்தார்.

ஒவ்வொரு வருடமும் கலை பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், தொன்மையான கலை வடிவங்களைப் பேணி காப்பதற்காகவும், பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசு 'கலைமாமணி' விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இயல், இசை, நாடக மன்றத்தால், 1959 ஆம் ஆண்டில் இருந்தே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் 128 பேருக்கும், ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது 6 பெண் கலைஞர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.  முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரோஜாதேவி ஜமுனா ராணி, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் டி.இமான், தீணா, இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ்  உள்ளிட்ட மொத்தம் 132 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவர்களில் 
சிறப்பு கலைமாமணி விருது  பிரபல பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது விழாவில், பி.சுசிலா கலந்து கொள்ளாததால், அவருடைய வீட்டுக்குச் சென்று இயல் இசை நாடக மன்றத்தின் அதிகாரிகள் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளனர். இதனையடுத்து அந்த விருதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி விருதை பெறும் முதல் இசை கலைஞர் பி சுசிலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!