
பிரபல நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று சற்று ஓய்ந்ததை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஆனால் தற்போது மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவ துவங்கியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரது அம்மா தெரிவித்தார். அதே போல் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அதில் இருந்து குணமடைந்த நிலையில், இவரை தொடர்ந்து கடந்து இரண்டு நாட்களுக்கு முன் முன்னணி பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவரை அடுத்து நடிகர் மாதவனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
இதுகுறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நடிகர் அமீர் கானுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ராஞ்சோவை அடுத்து ஃபர்ஹானுக்கு. வைரஸ் எப்பொழுதுமே நம்மை பின்தொடர்ந்தது இம்முறை ஜெயித்துவிட்டது. ஆனால் ஆல் இஸ் வெல். கோவிட் விரைவில் வெளியில் செல்லும். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ராஜு பின்தொடர விரும்பவில்லை. உங்களின் அன்புக்கு நன்றி. குணமடைந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாதவனின் ரசிகர்கள் பலர் விரைவில் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என பிராத்தனை செய்து வருகிறார்கள். மீண்டும் பரவ துவங்கியுள்ள கொரோனாவை கட்டு படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 45 வயதை கடந்த அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.