ஆர்ஆர்ஆர் கொடுத்த சக்சஸ்: சம்பளத்தை 100 கோடி வரை உயர்த்திய ராம் சரண்!

Published : Dec 19, 2022, 03:26 PM IST
ஆர்ஆர்ஆர் கொடுத்த சக்சஸ்: சம்பளத்தை 100 கோடி வரை உயர்த்திய ராம் சரண்!

சுருக்கம்

ஆர்ஆர்ஆர் படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் தனது சம்பளத்தை ரூ.100 கோடி வரையில் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராம் சரண். கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சிறுத்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மகதீரா, நாயக், த்ருவா, புரூஸ்லீ, கைதி நம்பர் 150 என்று பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பாடல் மட்டும் அல்ல அந்தப் பாடலுக்கு வரும் நடனத்திற்கும் அடிமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அந்த நடனத்தை ஆடி வீடியோ எடுத்தும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ... பல இடங்களில் காயங்களுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

இந்த படத்தில் ராம் சரணுக்கு ரூ.45 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இந்த படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்தப் படம் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் தற்போது தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி, ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் அக்‌ஷய் குமார், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இவ்வளவு ஏன் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகியோரும் கூட ரூ.100 கோடி வரையில் சம்பளம் வாங்குகின்றனர்.

டபுள் சந்தோஷத்தில் ஐஸ்வர்யா ராய்... குடும்பத்தோடு குட் நியூஸ் சொன்ன அபிஷேக் பச்சன் - குவியும் வாழ்த்துக்கள்

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ராம் சரணின் 15ஆவது படமான ஆர்சி15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கிரா அத்வானி நடிக்கிறார். இந்தப் படத்திற்கே ராம் சரணுக்கு ரூ.100 கொடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படம் மட்டுமின்றி புஜ்ஜி பாபுவின் அடுத்த படத்திலும் நடிக்கிறார்.

சட்டை ரூ.2 லட்சம்... வாட்ச் ரூ.2 கோடி - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வாரிசு நடிகர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!