’என் மானம் போச்சு...25 பைசா நஷ்ட ஈடு வேண்டும்’ நட்டு கழண்டுபோச்சா இந்த ராக்கி சாவந்துக்கு?

Published : Nov 01, 2018, 11:32 AM ISTUpdated : Nov 01, 2018, 12:30 PM IST
’என் மானம் போச்சு...25 பைசா நஷ்ட ஈடு வேண்டும்’  நட்டு கழண்டுபோச்சா இந்த ராக்கி சாவந்துக்கு?

சுருக்கம்

குழாயடி சண்டை பெண்களே கூசிக்குறுகும் அளவுக்கு தொடர்ந்து  குடுமிப்புடி சண்டை போட்டு மீடியாவில் தொடர்ந்து தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்துவரும் தனுஸ்ரீ தத்தா-ராக்கி சாவந்த் வகையறாக்கள் சற்றும் டயர்டாகாமல் தங்கள் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘தனுஸ்ரீதத்தா ஒரு பொய்யர்' எனக் கூறியதுடன், அவர் போதைக்கு அடிமையானவர். ஓரின சேர்க்கையாளர். என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்திய ராக்கி சாவந்த் தற்போது 25 பைசா நஷ்ட ஈடு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராக்கி சாவந்த் “ நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி நல்லபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்ரீ தத்தா கூறிவரும் மோசமான மற்றும் இழிவுபடுத்தும் பேச்சுகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை மீண்டும் ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகும்.

எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனுஸ்ரீ தத்தா “25 பைசா” இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோர கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?