விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கும் படத்துக்கு தடை கேட்கும் தமிழ் இசையமைப்பாளர்!

By vinoth kumarFirst Published Nov 1, 2018, 11:24 AM IST
Highlights

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்து, அடிசனல் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கும் மாதவனின் ‘ராக்கெட்- த நம்பி எஃபெக்ட்’ படத்தை என் அனுமதியில்லாமல் ரிலீஸ் பண்ணமுடியாது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்து, அடிசனல் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கும் மாதவனின் ‘ராக்கெட்- த நம்பி எஃபெக்ட்’ படத்தை என் அனுமதியில்லாமல் ரிலீஸ் பண்ணமுடியாது. இப்படத்துக்கு தடைகேட்டு விரைவில் வழக்கு தொடுக்கவிருக்கிறேன்’ என்று சிவகாசி தீபாவளி ராக்கெட்டை ஏவுகிறார் பூ’, களவாணி’ படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். 

இஸ்ரோ ராக்கெட்டுக்கும் சிவகாசி ராக்கெட்டுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று குழம்புகிறவர்களுக்காக குமரனின் ஸ்டேட்மெண்ட் இதோ... ’இருபது ஆண்டுகளுக்கு முன்பே நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்திருந்தேன். சுமார் 20 எபிசோடுகள் வரைக்கும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட அந்த தொடர், பல்வேறு சட்ட சிக்கல்களின் காரணமாக வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

 

நம்பி நாராயணனின் முழு சம்மதத்துடன் எடுக்கப்பட்ட அந்த தொடரினால் எனக்கு ஏராளமான பொருள் நஷ்டம். பல்வேறு சிக்கல்களை சந்தித்து நான் மீண்டு வந்திருக்கிறேன். இந்தப்படத்தை துவங்குவதற்கு முன்பே, என் நிலை குறித்து நான் மாதவனிடம் தெரிவித்த போதும் அவர் பிடிவாதமாக இந்தப் படத்தில் நடித்து முடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

இந்த நிலையில் என் சம்மதம் இல்லாமல் நடிகர் மாதவன் நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பது நியாயம் இல்லை. எனவே அவர் மீதும் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர முடிவெடுத்திருக்கிறேன்’ என்கிறார் குமரன்.

click me!