
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த வானவில் படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தனுஷ் நடித்த தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்திலும் மாயா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
இந்த மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘‘நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
மாயா கிருஷ்ணனை கடந்த 2016–ல் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 18. மாயா எனக்கு வழிகாட்டியாக நிறைய ஆலோசனைகள் கூறினார். அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம்.
ஒரு கட்டத்தில் மாயா தன்னுடன் மட்டும்தான் நான் பழக வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுக்க தொடங்கினார். என்மீது ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கினார். மெதுவாக எனது நண்பர்களை துண்டித்து அவர்கள் என்னை வெறுக்க செய்தார். எனது பெற்றோர்களையும் ஒதுக்க செய்தார்.
நான் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் இழக்க தொடங்கினேன். என் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்தார். ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார். அவருடன் ஒரே அறையில் ஒரே மெத்தையில் தூங்குவது சாதாரண விஷயமானது.
ஆனால் இது தவறு என்பதை ஒரு கட்டத்தில் நான் உணர்ந்தேன். பிறகு அதில் இருந்து மீண்டு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். தற்போது அதிலிருந்து விலகிவிட்டேன் என அனன்யா தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இதுவரை நடிகைகள் நடிகர்கள் மீது தான் மீடூ வில் புகார் அளித்துவந்தனர். முதன் முறையா ஒரு நடிகை, மற்றொரு நடிகை மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.