
மதுரையில் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகுமார் சென்றபோது அங்கு செல்பி எடுக்க முயன்ற சிறுவனின் போனை தட்டி விட்டார் சிவகுமார். இந்த வீடியோ வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவியதை தொடர்ந்து, நடிகர் சிவகுமாருக்கு எதிராக கண்டனப்பதிவு செய்தனர். அதற்கு சிவகுமாரும் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் அந்த வாலிபர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், என் 19 ஆயிரம் ரூபாய் செல்போன் போச்சு....அது என் செல்போன் கூட இல்ல என் அண்ண செல்போன் 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் உடைந்து விட்டது....அன்றைய தினத்தில் மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக துணை முதல்வர் ஒபிஎஸ் வருவதாக இருந்தார். ஆனால் அவர் வர வில்லை... அவருக்கு பதிலாக அமைச்சர் உதயகுமார் வந்தார். அவருடன் செல்பி எடுத்தேன் அவர் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் நடிகர் சிவகுமார் தான் இப்படி கோபப்பட்டு தட்டி விட்டு விட்டார் என அவர் தெரிவித்து உள்ளார்.
அதே வேளையில், மன்னிப்பு கேட்ட சிவகுமாருக்கு ஒரு செல்போன் வாங்கி தர எவ்வளவு நேரம் ஆக போகிறது என சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.