
பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சர்ச்சை நடிகை ராக்கி சாவத், அவருடைய காதலர் தீபக்குடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக, அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் பிக்பாஸ் இந்தி சீசன் 13 ஆவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதில் பாலிவுட் சர்ச்சை நடிகை, அவருடைய காதலர் தீபக்குடன் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பை கொடுத்த, தொகுப்பாளரும், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான சல்மான் கானுக்கு நன்றி தெரிவித்து, தன்னுடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.